அத்திவரதர் தரிசனத்தில் பெண்ணுக்கு குவா..குவா..

தமிழ்நாடு

காஞ்சிபுரம், ஆக. 14: காஞ்சிபுரத்தில் ஆதி அத்திவரதரை தரிசனம்செய்ய வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அத்திவரதர் என பெயர் வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் ஆதி அத்திவரதரை தரிசிப்பதற்காக இன்று நெமிலிபானவரம் பகுதியை சேர்ந்த அசோக்குமார் மற்றும் அவரது மனைவி விமலா (வயது 25 ) ஆகியோர் வரிசையில் காத்திருந்தனர், நிறைமாத கர்ப்பிணியான விமலாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

உடனடியாக பக்தர்கள் ஒன்று சேர்ந்து 16கால் மண்டப மருத்துவ முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு 3கிலோ எடையுள்ள ஆண் குழந்தை சுக பிரசவத்தில் பிறந்தது. பின்னர் மேல்சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்போது தாயும்-சேயும் நலமாக உள்ளனர்.45ம் நாளில் அத்திவரதரின் ஆலயத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தைக்கு ஆதி அத்திவரதர் என்று பெயரிட வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் வைத்தனர்.இதனை ஏற்று அந்த குழந்தைக்கு அத்திவரதர் என பெயர் வைப்பதாக பெற்றோர் தெரிவித்தனர்.