தண்ணீர் பக்கெட்டில் விழுந்து குழந்தை பலி

சென்னை

சென்னை, ஆக.14: திருவள்ளூர் அருகே தண்ணீர் பக்கெட்டில் விழுந்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெங்கால் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு அருண் என்ற பெயரில் ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. குழந்தையை, குளிக்க வைப்பதற்காக பக்கெட் முழுக்க தண்ணீரை நிரப்பிவைத்துவிட்டு, குழந்தையை பக்கெட் பக்கத்தில் நிற்க வைத்துள்ளார்.

அப்போது, முருகனுக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதை எடுப்பதற்காக, குழந்தையை குளியலறையில் விட்டு விட்டு சென்றுள்ளார். இதனிடையே, நீர் நிறைந்த பக்கெட்டில் குழந்தை ஏற முயன்றபோது, பக்கெட் கவிழ்ந்தது. அதில் இருந்த தண்ணீர் முழுவதும் குழந்தையின் மீது மொத்தமாக கொட்டியுள்ளது. சத்தம்கேட்டு சமையலறையில் இருந்த குழந்தையின் தாய் சென்று பார்த்தபோது, குழந்தை திணறி கொண்டிருந்துள்ளது. குழந்தையை மீட்டு எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது.