சென்னை, ஆக.14: அயப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குட்கா பதுக்கி இருப்பதாக திருமுல்லைவாயில் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவஇடம் சென்ற போலீசார், அங்கிருந்த 200 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் ரூ.1.20 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, சின்னய்யா (வயது 53) என்பவரை கைது செய்தனர். இதேபோல் வியாசர்பாடி பகுதியில் கஞ்சா விற்ற செல்வக்குமார் (வயது 32), திருவள்ளூரை சேர்ந்தர் ரபீக் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.