மும்பை, ஆக.14:  தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டதில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி புகார்கள் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் நியமித்த சிஓஏ (நிர்வாக கமிட்டி) நற்சான்றிதழ் அளித்துள்ளது.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் பெயர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் பதவியிலும் இருந்து வருகிறார். ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையது. எனவே இவர் எப்படி தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பதவி வகிக்க முடியும் என்று ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் தரப்பில் ராகுல் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாக கமிட்டி உறுப்பினர் ரவி தோக்டே தெரிவிக்கையில், ராகுல் டிராவிட் விவகாரத்தில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி புகார் எதுவும் இல்லை, இனி டி.கே.ஜெயின் முடிவெடுக்கட்டும். எங்களைக் கேட்டால் நாங்கள் டிராவிடுக்கு நற்சான்றிதழ் வழங்கி விட்டோம் என்று தெரிவிப்போம், என்றார்.