திண்டுக்கல், ஆக.14:  டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதிச்சுற்றுப்போட்டி நேற்று நடந்தது.

இதில், மதுரை பாந்தர்ஸ் அணி-திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதல் பேட்டிங் செய்து, 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய மதுரைஅணி, ஒரு பந்து எஞ்சிய நிலையில் 130 ரன்களுக்குள் சுருண்டது.

இதன்மூலம், 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணி, இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. நாளை (ஆக.15) சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சேப்பாக் அணியுடன் திண்டுக்கல் அணி மோதுகிறது.