லண்டன், ஆக.14:  இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 251 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் டெஸ்ட்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து அணி தீவிரம் காட்டும். அதேசமயம், 2-வது டெஸ்ட்டை கைப்பற்றி முன்னிலை வகிக்க ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டும்.