‘பிகில்’ படக்குழுவினருக்கு மோதிரம் பரிசளித்த விஜய்

சினிமா

தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்கு பிறகு விஜய் – அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘பிகில்’. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய்யுடன், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, சவுந்தரராஜா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என 2 கெட்டப்புகளில் நடிக்கிறார். அப்பா விஜய் மீன் கடைக்காரராகவும், மகன் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளனர். கால்பந்து விளையாட்டில் உள்ள அரசியலை வெளிச்சம்போட்டு காட்டி உள்ளார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்த கட்ட பணிகள் தொடங்கி உள்ளது.

இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் படக்குழுவினர் அனைவருக்கும் நடிகர் விஜய் மோதிரத்தை பரிசாக வழங்கி உள்ளார். ஒவ்வொரு பட பணிகள் நிறைவடையும் போதும் இது போல் பரிசு வழங்குவது விஜய்யின் வழக்கமாகும்.