சென்னை, ஆக.14: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.408 குறைந்து ரூ.28,608-க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் விலை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக உச்சத்தில் காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் விலை ஏறுமுகத்திலேயே இருந்தது.

சென்னையில் நேற்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.3,612க்கு விற்கப்பட்டது. மேலும் 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.28,896 க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்து ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.51 குறைந்து ரூ.3,756க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.408 குறைந்து ரூ.28,608க்கு விற்பனை ஆகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.