சென்னை, ஆக.15: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று காலை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.
73-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.

இதே போல சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திறந்த வேனில் நின்றபடி காவல்துறை அணி வகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார், பின்னர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.