சென்னை, ஆக,15: காவிரி கரையோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெள்ளதால் எவ்வித பீதியும் அடைய வேண்டாம், அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வயதனோர், மாற்று திறனாளிகளின் சிரமத்தினை போக்கும் வண்ணம் இணையவழி ஒரு பக்க விண்ணப்ப முறையும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு நிலம் தொடர்பான பிரச்னைகளை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தனி இணையதள சேவையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து பொதுமக்களுக்கு அவ்வப்போது தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.காவிரி ந நீர் கால்வாய்கள் மற்றும் பிற நீர் நிலைகளில் நீர் வெளியேறும் போது நீச்சல், மீன்பிடித்தல் மற்றும் பிற பொழுதுபோக்கு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

ஆற்றங்கரையில் நின்று பொதுமக்கள் செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும். மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் உயர்மட்ட பாலங்கள் தவிர ஆற்றின் குறுக்கே செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்கு தரைமட்ட பாலங்களிலும் எச்சரிக்கை பதாகைகள் அமைக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.காவிரி படுகையில் பல்துறை மண்டலக் குழுக்கள், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையில் பயிற்சி பெற்ற காவலர்கள், பேரிடர் உதவிப் படை ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பாதுகாப்பு மையங்கள் / நிவாரண முகாம்களில் தேவையான குடிநீர், உணவு மற்றும் மருத்துவ வச கள் செய்து கொடுக்கப்படுவதை உறு செய்ய வேண்டும். பேரிடர் குறித்தான தகவல்கள் கள அளவில் உள்ள அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பத் ரமாக நிவாரண மையங்களில் தங்க வைப்பதன் மூலம் வெள்ள ஆபத்தி னை குறைக்க முடிகிறது. மேலும், பேரிடர் தொடர்பான தகவல்கள், கூசூளுஆஹசுக செயலி, சமூக வளைதளம் மற்றும் இதர (அச்சு மற்றும் மின்னணு) ஊடகங்கள் மூலம் அனுப்பலாம். இவ்வாறு அவர் கூறினார்.