இந்த மாதம் முழுவதும் மாலையில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை

சென்னை, ஆக.15: இந்த மாதம் முழுவதும் சென்னையில் நாள்தோறும் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். சென்னையில் நேற்று பெரும்பாலான இடங்களில் இரவில் மழை பெய்தது.
தென் மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகத்தில் குடகுமழை பகுதியில் தீவிரம் அடைந்ததால் தமிழகத்தில் வடபகுதியில் தொடர் மழை பெய்த போதிலும் பிற இடங்கள் வரட்சியாகவே காணப்படுகிறன்றன.

மேற்கு நோக்கி ஈரப்பதத்துடன் காற்று வீசியதே கனமழைக்கு காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் வரும் சனிக்கிழமை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அவ்வபோது மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தனியார் வெதர் மேன் பிரதிப் ஜான் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த மாதத்தில் மேற்கு நோக்கி வீசும் காற்று பலவீனம் அடையும் என்பதால் கடல் காற்று வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையால் இந்த மாதம் முழுவதும் பெரும்பாலான நாட்களில் சென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கோவை, நீலகிரி மாவட்ட மழைப்பகுதிகளில் சில இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூரில் அதிக பட்சமாக 8 சென்டிமீட்டரும், வால்பாறையில் 7 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.