புதுடெல்லி, ஆக.16: முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவரைக் காண செல்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 9-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த பிஜிபி தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.  இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காலை 11 மணியளவில் அருண் ஜேட்லியை காண எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடல்நிலையை, பல்வேறு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் பிஜேபி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, நிதித்துறை அமைச்சராக அருண் ஜெட்லி நியமிக்கப்பட்டார். ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பிரதமரின் ஆலோசனைகளை அமல்படுத்தியவர்.

கடந்த ஆண்டு அருண் ஜெட்லிக்கு அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் ஜெட்லி போட்டியிடவில்லை. மேலும் தனக்கு அமைச்சர் பதவி எதுவும் வேண்டாம் என்றும் மறுத்துவிட்டார். உடல்நிலை சரிவர ஒத்துழைக்காத காரணத்தால் அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கிறார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட 9-ஆம் தேதி திடீரென அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள கிமிமிவிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.