புதுடெல்லி, ஆக.16: தமிழகம், கர்நாடகா மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வடமாநிலங்களில் கனமழை பெய்து வந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் பல பகுதிகளும் வெள்ளத்தால் சூழப்பட்டன. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணை நீர்மட்டம் 111 அடியை தொட்டுள்ளது.

இந்நிலையில், நாளை முதல் வடமாநிலங்களில் மழை சீராக குறையும். அதேசமயம், தமிழகம், கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அரபிக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது