ஒரே குடும்பத்தில் 5 பேர் சுட்டு தற்கொலை

TOP-5

பெங்களூர், ஆக.16: கர்நாடக மாநிலம் குண்ட்லிபுட்டா என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

குண்ட்லிபுட்டா நகரின் பகுதியில் உள்ள சாமராஜன் நகர் வசித்து வருபவர் ஓம் பிரகாஷ் (வயது 36). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவரது தந்தை ஒரு ஜோசியர் என்று கூறப்படுகிறது.

இறந்தவர்களில் ஒருவரான ஓம்பிரகாஷ் (வயது 36), அவரது தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா (65), தாயார் ஹேமலதா (60), எட்டு மாத கர்ப்பிணியான மனைவி நிகிதா (28), ஆர்ய மகன் கிருஷ்ணா (4) ஆகிய நால்வரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அப்பகுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த தற்கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.