கன்னியாகுமரி, ஆக.16: கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து வருவதாலும், அடிக்கடி கடல் உள்வாங்குவதாலும் படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடலில் அவ்வப்போது கடல் உள்வாங்கி வந்தது. கடந்த சில நாட்களாக நீர்மட்டம் தாழ்வாக காணப்படுகிறது.

இதனால் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.