திருச்சி, ஆக.16: உள்நாட்டு பொருட்களை வாங்குவோம் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுதேசி இயக்க பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் கூறினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமையில் சுதேசி பிரகடன கோஷம் எழுப்பினர். பின்னர் அனைவரும் சுதேசி பிரகடன உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற மாநில அளவிலான ஆலோசனை கூட்டத்தில் கூறிய அவர் அன்னிய பொருட்களை புறக்கணித்தால் தான் உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க முடியும். வியாபாரம் செய்யவும், பொருட்களை தயாரிக்கவும் வெளிநாட்டு கம்பெனிகளை அனுமதித்து உள்நாட்டு வியாபாரத்தை மத்திய, மாநில அரசுகள் அழித்து விட்டன.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சுதேசி கொள்கைக்காக தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ளும். அக்டோபர் 2-ந் தேதி காந்தி பிறந்த தினத்திற்குள் எந்தக்கடையிலும் வெளிநாட்டு பொருட்கள் இல்லாத நிலையை ஏற்படுத்துவோம் எ இதையடுத்து வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் பிரச்சார ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.