வேலூர், ஆக.16: விஐடியில் 73-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய விஐடி வேந்தர் ஜி. விசுவநாதன், விஐடியிலும் மற்ற பொறியியல் கல்லுவரிகளில் பட்டம் பெறும் பொறியியலாளர்கள் இந்தியாவை தன்னிறைவு அடைவற்கு பங்களிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

விஐடி பல்கலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில அதிகாரப்பூர்வ சட்டமன்ற ஆணைய தலைவர் நீதியரசர் பி.கலையரசன் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:- இளைஞர்கள் குறிப்பாக விஐடியிலும் மற்ற பொறியியல் கல்லுவரிகளில் பட்டம் பெறும் பொறியியலாளர்கள் இந்தியாவை தன்னிறைவு அடைவற்கு பங்களிக்க வேண்டும்.

இந்தியா உலகில் உள்ள நாடுகளில் பெரிய பொருளாதார நாடாகவும் மற்றும் உலகின் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேரவும் இது உதவும். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரு வளர்ந்து வரும் நாடு மற்றும் விஐடியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் உலகின் 50 நாடுகளின் மாணவர்கள் விஐடியில் கல்வி , பயில்கிறார்கள். இது விஐடியில் மாணவர் களின் பன்முகத் தன்மையைக் குறிக்கிறது.

ஊழல், வரிஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் நாட்டின் மூன்று தீமைகளாகும், இதை நாட்டின் எதிர்காலத் தலைவர் களான இளைஞர்கள் இந்த தீமைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். பள்ளிகள், கல்லுவரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் மூலமாக சிறந்த குடிமக்களை நாம் உருவாக்கினால் மட்டுமே இந்த தீமைகளை நாம் சமாளிக்க முடியும் இது இந்தியா வளர்ந்த நாடாக மாற எங்களுக்கு உதவும் இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் விருந்தினராக, அ. சங்கரன், விஐடி துணைத்தலைவர் முனைவர் சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர், சந்தியா பெண்ட்ட ரெட்டி,துணைவேந்தர் ஆனந்.சாமுவே ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.