தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்தது

சென்னை

சென்னை, ஆக.17: தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று சற்றே குறைந்த நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.192 அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாகவே ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.280 குறைந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம், ரூ.192 உயர்ந்து, ரூ.28,856-க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.24 அதிகரித்து, ரூ.3, 607-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்துள்ளது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 47 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.100 குறைந்து ரூ.47,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.