தாம்பரம், ஆக.17: தாம்பரத்தில் உள்ள அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் கோயில் நடைபெற்ற சுதந்திர தின விழாவையொட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார். 73-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தாம்பரம் அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் திருக்கோயிலில் இந்த சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக அரசு ஊரக தொழில் துறை அமைச்சர் பா. பெஞ்சமின் கலந்துக் கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர்கள் சிட்லபாக்கம் ச. இராஜேந்திரன், பரங்கிமலை முன்னாள் பெருந்தலைவர் என்.சி. கிருஷ்ணன், தாம்பரம் நகர கழக செயலாளர் எம். கூத்தன், த.மு. துரைவேல், மாவட்ட பிரதிநிதி பி.கே. பரசுராமன், ஜான் எட்வர்ட், சாய்கணேஷ், மாணிக்கம், மாரி, பொன்னுசாமி கோயில் செயல் அலுவலர் கே. சிவகுமார், கணக்கர் மோகன்ராஜா, எழுத்தர் இரா. ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.