வட்டாசியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா

சென்னை

அம்பத்தூர், ஆக. 17: அம்பத்தூர் வட்டாசியர் அலுவலகத்தில் 73-வது இந்திய சுதந்திர தின விழா நடை பெற்றது. நிகழ்ச்சியில் வட்டாசியர் சி.ரஜினிகுமார் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினர்.

இதில் வருவாய் ஆய்வாளர்கள் ஆனந்தன், தீபாலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரேம்குமார், சரவணன், தங்கபாண்டியன், நாராயணமூர்த்தி, பார்த்திபன் மற்றும் கிராம உதவியளர்கள் சங்க சென்னை மாவட்ட துணை தலைவர் அன்பழகன் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.