சென்னை, ஆக.18: போலீஸ் பொய் வழக்கு போடுவதாக கூறி வரும் 21-ம் தேதி முதல் காலவரையாற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் என்.நிஜலிங்கம் கூறுகையில், மாநிலம் தலுவிய அளவில் டேங்கர் லாரி டிரைவர்கள், கிளினர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அடிக்கடி வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

4 நாட்களுக்க முன் பல்லிக்கரனையில் 2 லாரிகள் பரிமுதல் செய்யப்பட்டன. தேவையில்லாத காரணங்களுக்காக எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளால் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்தோம் என்றார். இதுகுறித்து அச்சங்கத்தினர் மேலும் கூறியதாவது: நிலத்தடி நீரை எடுக்க முறையான அனுமதி அளிக்க வேண்டும்.

இத்தொழில் ஈடுபட்டுள்ளவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனி வாரியம் அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும். தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்தும், உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 21-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

தண்ணீர் எடுக்க அரசு தரப்பில் உரிமம் வழங்கும் வரை பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்துள்ளனர். தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்களின் போராட்ட அறிவிப்பால் தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது மாநகர மக்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தனியார் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அடுக்குமாடி வளாகங்கள், ஐடி பூங்காக்கள், விடுதிகள், விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள் மோசமாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.