திருநெல்வேலி,ஆக.18: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும், கிறிஸ்டோபர் 56, என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார்.

அவர் அடிக்கடி தொலைபேசியில் பேசிய கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லை சேர்ந்த லீலாபாய் 52, என்ற பெண்ணை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தனர். வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இரவில் விசாரணையின் போது கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அப்போது ரத்த வாந்தியெடுத்து ஸ்டேஷனிலேயே இறந்து விட்டார்.

சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் இரவில் பெண்களை வைக்க கூடாது என்ற விதிமுறைகளை மீறி வைத்திருந்ததால் இந்த லாக் அப் இறப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று(ஆக.,17) இரவில் லாக் அப் தாக்குதலில் இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி கொண்டு செல்லப் பட்டது. சம்பந்தப்பட்ட போலீசார், உயர்அதிகாரிகளின் உத்தரவிற்காக காத்திருக்கின்றனர்.