பெங்களூர், ஆக.18: கர்நாடக மாநிலத்தில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிர் இழந்துள்ளனர். இம்மாநிலத்தில் உள்ள கொப்பம் என்ற இடத்தில் சுதந்திரதின விழாவையொட்டி உயரமான கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.

இந்த கொடியை இறக்கியபோது மின்கம்பியில் உரசியதால் 5 மாணவர்கள் உயில் இழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிலந்த மாணவர்களின் குடும்பத்தினருக்க நிவாரண தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

மின்கம்பத்தின் அருகே உயரமான கொடி கம்பம் அமைத்து கொடியோற்றியது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.