கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த நடிகர் ஆர்கே

சினிமா

எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக வலம் வரும் ஆர்கேவுக்கு, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.

அந்தவகையில் கடந்த 18 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தினார்.

டை அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் விதமாக கின்னஸ் சாதனை நிகழ்ச்சியும் நடத்தியுள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி கடந்த 15-ந் தேதி பூந்தமல்லி ஈவிபி பிலிம் சிட்டியில் 1006 நபர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி ஒரே சமயத்தில் விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை அவர்களை பயன்படுத்த செய்து கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனை நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் நடுவர் குழுவை சேர்ந்த அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.