ஈரோடு, ஆக.18: நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளை கலக்கவிடுவோரை மிசா சட்டத்தில் கைது செய்ய அரசு முடிவு என அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளை கலக்கவிடுவோரை மிசா சட்டத்தில் அடைக்க அரசு தயாராக உள்ளது.

கோபிசெட்டிப்பாளையத்தை தனி மாவட்டமாக்கும் நடவடிக்கை தற்போது ஏதுவும் நடைபெறவில்லை. தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.