ராமேஸ்வரம், ஆக.18: தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சுமார் 200 படகுகளில் கச்சத் தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில், தமிழக மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. மேலும், படகுகளில் சென்ற 2 ஆயிரம் மீனவர்கள் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்.