மும்பை, ஆக.19:  மகாராஷ்டிரா மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதிய விபத்தில் 13 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் நிம்குல் கிராமம் அருகே ஷஹடா-தொண்டைச்சா சாலையில் 45 பயணிகளுடன் அவுரங்காபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த பேருந்தின் மீது எதிர்திசையில் இருந்து வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று மோதியதில் பேருந்து உருக்குலைந்து போனது. இதில் சிக்கிய 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 8 பேர் உட்பட 20 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.