சென்னை, ஆக.19: துறையூர் அருகே மினிவேன் கிணற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நேற்று மினி வேன் டயர் வெடித்தால் கிணற்றுக்குள் விழுந்தது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். பின்னர் சிகிச்சைக்கா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இது தவிர பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.