புதுடெல்லி, ஆக.19: யமுனை நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடுவதால் டெல்லியில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் யமுனை நதியில் இன்று வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது.

அரியானா மாநிலத்தின் ஹதினி குந்த் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 8.28 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டிருப்பதாலும், தொடர்ந்து கனமழை பெய்வதாலும் யமுனை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நீர்மட்டம் நாளை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.