மும்பை, ஆக.20:  தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் தமிழக வீரர்கள் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க ஏ அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணியுடனான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய ஏ அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக வீரர்கள் விஜய்சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஐபிஎல் தொடரில் காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூரும் அழைக்கப்பட்டுள்ளார். முதல் 3 போட்டிகளுக்கு மணீஷ் பாண்டேவும், அடுத்த 2 போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயரும் கேப்டன்களாக செயல்படுகின்றனர்.

அணி விவரம் – முதல் 3 போட்டிகள்:
மணீஷ் பாண்டே (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், அன்மோப் பிரீத், ரிக்கி புய், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஷிவம் துபே, குணால் பாண்ட்யா, அக்ஷர் படேல், சாஹல், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், கலீல் அகமது, நிதீஷ் ராணா

கடைசி 2 போட்டிகள்:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சுப்மன் கில், பிரஷாந்த் சோப்ரா, அன்மோல்பிரீத் சிங், ரிக்கி புய், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, விஜய் சங்கர், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், ராகுல் சாஹர், ஷர்துல் தாகூர், துஷார் தேஷ்பாண்டே, இஷான் பரோல்.