புதுடெல்லி, ஆக. 20: புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திராயான் 2 நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இன்று காலை 9 மணியளவில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்று சிவன் அறிவித்தார்.
நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்திராயன் 2 விண்ணில் அனுப்பப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் உதவியுடன் இது விண்ணில் செலுத்தப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திராயன் 2 இன்று திரவ என்ஜினை இயக்கி நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் கொண்டு செல்லப் பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் இன்று பெங்களூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சந்திராயன்-2 விண்கலம் அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்று சிறப்பாக செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.ஒவ்வொரு கட்டத்திலும் சந்திராயன்-2 சிறப்பாக செயல்படுகிறது.

நமது இலக்கை நிச்சயமாக அடைவோம். செப்டம்பர் 2-ந் தேதி ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார். இதை தொடர்ந்து செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்.2 ஆம் தேதி சந்திராயன் 2 ல் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் சுற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதை 2 முறை மாற்றப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு, செப் 7ஆம் தேதி நிலவில் மெதுவாக தரையிறக்கப்பட்டு ஆய்வு தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

எப்போதும் உறுதுணையாக இருங்கள். நிலவில் கால் பதித்து சந்திரயான் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க போகிறது. இந்த நிகழ்வை காண பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடைசி நிமிடத்தில் நிச்சயம் வருவார் என எதிர்பார்க்கிறோம்.