மாசன், ஆக.20:  சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி மீண்டும் டாப் 10-ல் இடம்பிடித்துள்ளார், அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனை மேடிசன் கீஸ்.

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் ஒஹியோவில் உள்ள மாசன் நகரில் நடந்தது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்னெட்சோவாவை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடந்தேறிய இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸ் 7-5, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் குஸ்னெட்சோவாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம், மேடிசன் கீஸ் தரவரிசையில் 8 இடங்கள் ஏற்றம் கண்டு மீண்டும் டாப்-10 வரிசைக்குள் இடம் பிடித்தார்.

இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், ரஷிய வீரர் மெட்விதேவ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த பட்டத்தை மெட்விதேவ் வெல்வது இதுவே முதல்முறையாகும். இதன்மூலம், மெட்விதேவ் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.