காஞ்சிபுரம், ஆக. 20: ஆதி அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள திருக்குளத்தை பார்வையிட பக்தர்கள் அனுமதிக்க வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்தி வரதர் திருவிழா கடந்த 17 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

அத்தி வரதரை அனந்த சரஸ் திருக்குளத்தில் வைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருக்குளத்தின் கரையில் இருந்து குளத்தில் உள்ள கிணறு வரை மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக பாதை அமைக்கப்பட்டு இருந்தது.

சனிக்கிழமை இரவு பெருமாள் திருக்குளத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நிறைவடைந்தது. பாதைகள் அமைக்கப்பட்டு இருந்த மணல் மூட்டைகளை அகற்றும் பணி நேற்று நடைபெறத் தொடங்கியது.
தொடர் மழை காரணமாக அனந்தசரஸ் திருக்குளம் நேற்று காலை வரை இரண்டு அடி உயரம் அளவுக்கு நிரம்பியிருந்தது திருக்குளத்தை பார்வையிட அனுமதிக்க பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அத்தி வரதர் திருவிழா 48 நாட்கள் ஒரு கோடிக்கு அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து சென்றனர் .

திருக்குளத்தில் பெருமாள் வைக்கப்பட்டுள்ள பிறகு பக்தர்கள் பலரும் கோயிலுக்கு வந்து அனந்தசரஸ் திருக்குளத்தை பார்வையிட வருகின்றனர். ஆனால் பெருமாள் வைக்கப்பட்டுள்ள திருக்குளத்தை பக்தர்கள் பார்வையிட காவல் துறையினர் அனுமதிப்பதில்லை. இதனால் பக்தர்கள் திரும்பி செல்கின்றனர். அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள திருக்குளத்தை பார்வையிட பக்தர்கள் அனுமதிக்க வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.