புதுடெல்லி, ஆக.20 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த தினத்தினை முன்னிட்டு புதுடெல்லியில் அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோன்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், புபீந்தர் சிங் ஹூடா மற்றும் அகமது பட்டேல் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் தமிழகம் மற்றும் புதுவையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.