கமல்ஹாசன் ஜித்து ஜோசப்பிடம் உதவியாளராக பணியாற்றிய பாஸ்கரன் இயக்க¤உள்ள படம் மெய்.. இந்த படத்தில் பிவிஎஸ் குழுமத்தை சேர்ந்த நிக்கி சுந்தரம் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்க ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார், முக்கிய வேடத்தில் சார்லி,கிஷோர், ராம்தாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மருத்துவத்துறையில் நடைபெறும் மோசடிகளை பற்றி விவரிக்கும் மெடிக்கல் திர்ல்லராக இந்த படம் உருவாகி உள்ளது. வரும் 23-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

படம் குறித்து இயக்குனர் பாஸ்கரன் கூறியதாவது:- மெய் என்றால் உண்மை என்றும், உடல் என்றும் பொருள் உண்டு. இந்த கதைக்கும், தலைப்பிற்கும், சம்மந்தம் இருப்பதால் மெய் என பெயர் வைத்தோம். மருத்துவத்துறையில் நடைபெறும் மோசடிகளை குறிப்பாக உறுப்புகள் திருட்டு குறித்து இந்த படம் விவரிக்கிறது. அமெரிக்காவில் படித்திருந்தாலும் இந்த படததில் நிக்கி சுந்தரம் டாக்டராக சிறப்பாக நடித்துள்ளார்.

அதேபோல் இதுவரை எந்த பெண்ணும் நடித்திராத மெக்கல் ரெப் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்துள்ளார். என் வாழ்க்கையில் என்னை பாதித்த சம்பவத்தை மையமாக வைத்து இந்த கதையை எடுத்தள்ளேன்.இப்படம் வரும் 23-ம் தேதி வெளியாக உள்ளது என்றார்.