புதுடெல்லி, ஆக.20: 2019ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்களை கவுரப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அர்ஜூனா, கேல் ரத்னா போன்ற உயரிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்துவருகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான (2019) தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோருக்கு கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேல் ரத்னா விருது, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் இந்த விருந்து 1991-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.