சென்னை, ஆக.21: உயர்கல்விக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் உள்ள வேளாண் கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டம் இன்று நடைபெறற்து. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, விழா மலரை வெளியிட்டு பேசினார்.

அப்போது முதல்வர் பேசியதாவது:- கொங்கு மண்டலத்தில் உள்ள கல்லூரிகளில் முக்கியமான இந்த வேளாண் கல்லூரி திகழ்ந்து வருகிறது. இதன் பொன் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக அரசு கல்வியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உயர் கல்விக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 48 சதவிகிதத்தினர் உயர்கல்வி படித்து வருகிறார்கள்.பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது நல்லது. மாணவிகள் மக்களிடையே இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பவானி முதல் கரூர் வரை உள்ள மாநில நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை வரையாக தரம் உயர்த்தப்படும். மேலும் கொடுமுடி முதல் நாமக்கல் வரை புதிய ஆற்றுப்பாலம் கட்டப்படும்.

இவ்வாறு முதல்வர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்