சென்னை, ஆக.21: போலி கால்ஷீட் கொடுத்து லட்ச கணக்கில் பண மோசடி செய்து தப்பிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திரைப்பட இயக்குநர் மீது விருகம்பாக்கம் போலீசில் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் நரேஷ் கோத்தா (வயது 32). திரைப்பட தயாரிப்பாளரான இவர், விருகம்பாக்கம் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தன்னிடம் வந்த திரைப்பட இயக்குநர் ஒருவர், நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாக கூறினார்.

இதற்காக விஷாலிடம் கால்ஷீட் வாங்கியிருப்பதாக கூறி அதன் நகலையும் காண்பித்தார். இதனை நம்பி, 2016-ம் ஆண்டு ஏப்ரலில் இருந்து செப்டம்பர் வரையிலான 6 மாத காலக்கட்டத்தில் ரூ. 47 லட்சம் பணத்தை அவருக்கு கொடுத்தேன்.
பிறகுதான் எனக்கு அவர் காண்பித்தது போலியான கால்ஷீட் என தெரியவந்தது என்று கூறியுள்ளார். இதன்பேரில், சம்பந்தப்பட்ட திரைப்பட இயக்குநர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி உள்ள இயக்குநரை தேடி வருகின்றனர்.