சென்னை, ஆக.21: சிதம்பரம் விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேவலமான முறையில் வேட்டையாடப்படுகிறார் என்று கூறியிருக்கிறார். அவருக்கு துணையாக நாங்கள் இருப்போம்.

விளைவுகள் எதுவாக இருப்பினும், உண்மைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றும் பிரியங்கா தெரிவித்து உள்ளார். அரசுக்கு எதிராக தயக்கமின்றி உண்மைகளை பேசியவர். அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியவர் என்றும் பிரியங்கா கூறியிருக்கிறார்.