மும்பை, ஆக.21:  அக்டோபரில் தொடங்கவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னையை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுவர், சிறுமியர்களுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் மும்பையில் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சிறுவர், சிறுமியர் என இரு பிரிவுகளின் கீழ் நடக்கவுள்ள இந்த போட்டியில், இளம் வயது கிராண்ட் மாஸ்டர்களான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா, நாக்பூரைச் சேர்ந்த திவ்யா தேஷ்முக் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இந்த தொடரில் ஜமைக்கா, இத்தாலி, மலேசியா உள்பட மொத்தம் 62 நாடுகளை சேர்ந்த சுமார் 400-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.