மருத்துவர் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்

தமிழ்நாடு

திருவள்ளூர், ஆக, 21: திருவள்ளூர் எம்ஜிஆர் சிலை அருகே அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது திருவள்ளூரில் நடைபெற்ற அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின்சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான அரசு மருத்துவர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசு மருத்துவர் களுக்கு தகுதிக்கேற்ற ஊதியத்தை வழங்கவேண்டும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட ஐந்து அம்சக் கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் வரை சென்றனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் வருகிற 23ஆம் தேதி சென்னையில் அரசு மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள போவதாகவும் 27ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்தனர்.