தாம்பரம்,ஆக.21: தாம்பரம் காந்திரோடு நியூ ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் எழுந்தருளிய அருள்மிகு ஸ்ரீ சாலை விநாயகர் ஸ்ரீ நாகாத்தம்மன் கோயிலில் 5ஆம் ஆண்டு ஆடித்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலயஆடி விழாவையொட்டி பந்தக்கால் நடுவது, அம்மனுக்கும், பக்தர்களுக்கும் காப்புக் கட்டுதல், கூழ் வார்த்தல், கும்பம் போடுதல், பிரசாதம் வழங்குவது ஆகியவை நடைபெற்றன.

பின்னர் நாகாத்தம்மன் சிலைக்கு பெண்கள், சுமந்து வந்த பாலை ஊற்றி மகா அபிஷேகம் மஹா தீபாராதனை செய்தனர். இதனை தொடர்ந்து அலங்காரம் செய்ய பூங்கரகம் ஏந்தி, ஆகாயமாலையாக மேற்கு தாம்பரம் குளக்கரை தெருவில் உள்ள செல்லியம்மன் கோயிலிருந்து புறப்பட்டு ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில் வந்தடைந்து பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தி அம்மனுக்கு கூழ் வார்த்தல் வைபவம் நடந்தது. மாலையில் அம்மனுக்கு கும்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இச்சிறப்பு விழாவினை தேவஸ்தான நிர்வாகிகள் கௌரவ தலைவர்கள் சந்திரன், தாமோதரன், தலைவர் சரவணன், செயலாளர் ரவி, பொருளாளர் ராஜசேகரன், துணை தலைவர்கள் அருணகிரி, குகன்ராஜ், துணை செயலாளர்கள் அன்புசெல்வம், புஷ்கர் நரேன், துணை பொருளாளர் சச்சிதாணந்தம், இணை செயலாளர் ராம்குமார், இணை பொருளாளர் சுபாஷ்சந்தர் செய்தனர்.