விஸ்வரூபம்-2, வடசென்னை படங்களுக்கு பிறகு நடிகை ஆன்ட்ரியா வேறு புதிய படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் திருமணமான ஒருவருடன் தவறான உறவு வைத்திருந்ததாகவும், அவர் என்னை மனதளவிலும், உடல் அளவிலும் காயப்படுத்திவிட்டார். அதனால் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்ததால் படங்களில் நடிக்காமல் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கத்தார் நாட்டில் நடந்த தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கான சைமா விருது வழங்கும் விழாவில் உற்சாகமாக ஆன்ட்ரியா பங்கேற்றார். சோகத்தில் இருந்து மீண்டு புதிய பிறவி எடுத்து விட்டேன். இனி மீண்டும் புதிய படங்களில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.