புவனேஸ்வர், ஆக.22: ஒடிசாவில் கர்ப்பிணியை பிரசவத்துக்காக கட்டிலில் 12 கி.மீ. தூரம் கிராமவாசிகள் சுமந்து சென்றனர்.

காளஹண்டி மாவட்டத்தில் உள்ள நெஹலா கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. அங்கு ஆம்புலன்ஸ் வருவதற்கான முறையான சாலை எதுவும் இல்லை.

எனவே அவரது உறவினர்கள், கர்ப்பிணியை கட்டிலில் படுக்க வைத்தபடி தோளில் சுமந்து கொண்டு சென்றனர். வழியில் குறுக்கிட்ட ஜெலிங்கதோரா என்ற ஆற்றையும் கடந்து சென்றனர்.

பின்னர் 12 கி.மீ. தொலைவை கடந்து கனிகுமா கிராமத்தை அடைந்தனர். அங்கிருந்து கர்ப்பிணி பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.