சென்னை, ஆக.22: இஸ்ரோவில் ஆண், பெண் என்ற வித்தியாசம் எதுவும் இல்லை, திறமையே முக்கியம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவர் சிவன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இஸ்ரோவில் ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசம் கிடையாது. திறமையானவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. வருங்காலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பெண்கள் தலைமை வகிக்க வாய்ப்பு உள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு நிலவில் தரையிறங்குவதற்கான முயற்சியை ஆரம்பிக்கும். அப்போது அதன் வேகம் முற்றிலும் குறைக்கப்பட்டு நிலைநிறுத்தப்படும்.