மக்கள் வசதிக்காக புதிய மாவட்டங்கள்: ஆர்.பி.உதயகுமார்

தமிழ்நாடு

திருச்சி, ஆக.22: திருச்சி இந்திய மேலாண்மை கழகத்துடன், தமிழக அரசின் இ-சேவை மையமானது தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் தொடக்கவிழா மற்றும் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கம் நேற்று திருச்சி- புதுக்கோட்டை ரோட்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே உள்ள இந்தியன் மேலாண்மை கழகத்தில் நடந்தது.

விழாவிற்கு இந்திய மேலாண்மை கழக இயக்குனர் பீமராய் மெட்ரி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொழில்நுட்ப துறை அரசின் முதன்மை செயலாளர் சந்தோஷ்பாபு வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், கருத் தரங்கத்தை தொடங்கி வைத்து பேசுகையில், மக்களின் கோரிக்கையை ஏற்று அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் மேலும் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என்றார்.