மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

சென்னை

தாம்பரம், ஆக. 22: தாம்பரம் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் மழைநீரின் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் ஆணையர் பொறுப்பு பொறியாளர் எம் கருப்பையா ராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு மழைநீரை எப்படி சேமிப்பது, மழை நீரை எப்படி சுத்தம் செய்வது மழைநீரை சேமித்து வைத்து எப்படி பயன் படுத்துவது போன்ற விழிப்புணர்வுகளை தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் காணொலி மூலம் காண்பித்து பொதுமக்களுக்கு மழைநீரை சேமிக்கும் மற்றும் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமாறு அதிகாரிகள் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

இந்த கூட்டத்தில் அமைப்பு அலுவலர் பொறுப்பு எஸ் குமார் மேலாளர் மேகலா சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் சிவகுமார் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்