விநாயகர் சிலை வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு

புதுச்சேரி, ஆக. 22: புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சிலை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சிலை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவல்துறை சி டி ஆர் எஸ் பி ராகுல் , துணை கலெக்டர், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மின்சார வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு விநாயகர் சிலை அமைக்க விருப்பம் உள்ளவர்கள் நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் காவல் துறையிடம் உரிய அனுமதி பெறவேண்டும் மண்ணால் செய்யப்பட்ட ரசாயன கலப்பற்ற சிலைகள் கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக் கிழங்கு மாவு கழிவுகளால் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் பாதிக்காத சிலைகள் மட்டுமே அமைக்க வேண்டும். இது சம்பந்தமாக புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரியம் மக்களுக்கு விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

விநாயகர் சிலை நிறுவும் இடங்களில் அமைக்கப்படும் கூடாரங்கள் பாதுகாப்பான எளிதில் தீப்பிடிக்காத உபகரணங்கள் ஆக மட்டும் அமைக்க வேண்டும். விநாயகர் சிலைகளுக்கு அலங்கார மின் விளக்குகள் மற்றும் மின்சார உபகரணங்கள் அமைப்பதற்கு மின் கம்பங்களில் இருந்து அனுமதி இன்றி மின்சாரத்தை பயன்படுத்த கூடாது இவர்கள் அனுமதி இன்றி மின்சாரம் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.மாணவர்கள் மற்றும் முதியோர்கள் நலன் கருதி அதிகமாக ஒலி எழுப்பும் ஒலிப்பானை விழாக்களில் பயன்படுத்தக் கூடாது என்று கூட்டத்தில் முடிவு செய்தனர்.