பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்-2. இந்த படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார், பாபிசிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் படத்திற்கு வசனம் எழுதுகிறார். படப்பிடிப்பு ஐரோப்பா மற்றும் கானாவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கடந்த வாரம் சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. கமல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்று நடித்து வருகின்றனர். தற்போது படத்தில் இன்னொரு முக்கியமான கேரக்டரில் நடிகர் விவேக் நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளது. ரஜினி உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் விவேக் இணைந்து நடித்துள்ளார். ஆனால் இதுவரை கமலுடன் நடித்ததில்லை. இந்த படம் மூலமாக கமலுடனும் விவேக் இணைவது உறுதியாகி உள்ளது.