அரசியலுக்கு நிச்சயம் வருவேன்: யாஷிகா அதிரடி

சினிமா

யோகிபாபு, யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜாம்பி, இப்படத்தை புவன் நல்லான் இயக்கி உள்ளார். பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். இப்படம் 30-ம் தேதி வெளியாக உள்ளது. இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை யாஷிகா ஆனந்த் மாலைச்சுடருக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- படத்தில் உங்கள் கேரக்டர் என்ன?
பதில்:- இந்த படத்தில் மருத்துவ மாணவியாக நடித்துள்ளேன். அதோடு நிறைய சண்டை காட்சிகளிலும் நடித்துள்ளேன். டூப் இல்லாமல் ரோப்பில் தொங்கியபடி சண்டைபோட்டேன். நான் கராத்தே வீரர் என்பதால் எனக்கு சண்டை போடும் போது கஷ்டமாக இல்லை.

கே:- யோகிபாபுவுடன் நடிக்க தயக்கம் இல்லையா?
ப:- நிச்சயமாக இல்லை. யோகிபாபு ஒரு திறமையான நடிகர். இந்த படத்தில் அவர்தான் என்னை தேர்வு செய்துள்ளார். படத்தில் நான் காமெடி செய்ய வில்லை. என்னை சுற்றி யோகிபாபு மற்றும் நண்பர்கள் செய்யும் காமெடி ரசிக்க வைக்கும்.

கே:- பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய இடைவேளை வந்தது எதனால்?
ப:- அதிக இடைவெளி என சொல்ல முடியாது. வரிசையாக படங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் படங்கள் ரிலீசாகாததால் இடைவெளிப்போல் தோன்றுகிறது.

கே:- இனிமேல் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடுவீர்களா?
ப:- கழுகு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தேன். கிருஷ்ணா என் நண்பர் என்பதால் அவர் கேட்டுக்கொண்டதால் ஒரு பாடலுக்கு ஆடினேன். இனிமேல் வேறு படங்களுக்கு ஆட மாட்டேன்.

கே:- சமூக வலைதளங்களில் தீவிரம் காட்டுகிறீர்களே?
ப:- சமூகத்தில் உள்ள ஒட்டு மொத்த பெண்களுக்கு ஆதரவாக நான் குரல்கொடுத்து வருகிறேன்.

கே:- அரசியலுக்கு வரும் எண்ணம் உண்டா?
ப:- நிச்சயம் ஒரு நாள் அரசியலுக்கு வருவேன். பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை.

கே:- பிக்பாஸ் சீசன் 3 எப்படி இருக்கு?
ப:- முதல் 2 சீசன் மாதிரி இல்ல. இவுங்க ஆரம்பிச்ச உடனே சண்ட போட தொடங்கிட்டாங்க. அதனால்ல சுவாரஸ்யம் குறைந்துவிட்டது.

கே:- புதிய படங்கள் என்னென்ன?
ப:- ஜாம்பி படத்தை தொடர்ந்து ஆரவ்வுடன் ராஜபீமா படத்தில் நடித்து இருக்கிறேன். இதில் துப்பறியும் கதாபாத்திரம், அதன் பிறகு மகத்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி நடிக்கும் சிறுத்தை சிவா படத்தில் நடித்து வருகிறேன். இது தவிர வையாக்கம் 18 என்ற வெப் சீரிசிலும் நடித்து உள்ளேன்.

கே:- எதிர் காலத்தில் எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை?
ப:- விஜய் தேவாரகொண்டா, சூர்யா, அஜித் ஆகியோர் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.